சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா.
சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள சீன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாசென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. விழாவில் சூர்யாவின் ரசிகர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.இந்தப் படத்தில் சூர்யா டிஎஸ்பி இன்பராஜ் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் அரசியல்ல சேரப் போறேன் என்று படத்தின் இறுதியில் சூர்யா பேசும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கியுள்ளார் நஸ்ரியா கதாநாயகியாக சூர்யாவிற்கு ஜோடி சேர்ந்துள்ளார். சுசின் சியாம் இசையமைத்துள்ள இத்திரைப்படம் 2d என்டர்டைன்மென்ட், ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தீபாவளி வெளியிடாக நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சூர்யாவின் முந்தைய படங்களான கருப்பு விஸ்வநாதன் அண்ட் கோ வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்று ரசிகர் தரப்பு எதிர்பார்த்து உள்ளது.
Tags :

















