தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காக 5 கோடி பேரம்-பள்ளி கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ராஜ்குமார்

by Admin / 02-11-2026 12:26:18am
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காக 5 கோடி பேரம்-பள்ளி கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ராஜ்குமார்

தமிழ்நாடு நாள் விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற பொழுது பள்ளி கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ராஜ்குமார் தம் உரையில், ஒரு நபர் தமக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்காக 5 கோடி பேரம் பேசப்பட்டதாகவும் அந்தப் பதவியை பெற்று தருமாறு கோரி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி மூலமாக 5 கோடி லஞ்சம் தர முன்வந்தார் .ஆனால் ,500 கோடி கொடுத்தாலும் தகுதியற்ற ஒருவருக்கு முதல்வர் விஜய் எந்த பதவியையும் தர மாட்டார் என்று கூறி ஒரு ரூபாய் கூட வாங்காமல் தகுதியான நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமிக்கு அந்த பதவி வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள், எதிர் கேள்விகள் கிளம்பின.  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமா,ர் லஞ்சம் வாங்குவது எவ்வளவு குற்றமோ அதே அளவு லஞ்சம் கொடுக்க முன்வருவதும் குற்றமாகும் என்றும் அஞ்சு கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற அந்த நபர் யார் என்பதை அமைச்சர் ஏன் மறைக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை லஞ்சம் கொடுக்க முயன்ற நபரை அமைச்சர் உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் பாஜக  நாராயணன் திருப்பதி சாமி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முற்படுவதை ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொறுப்பான அமைச்சர் பதவி இருந்து கொண்டு தமக்கள் அஞ்சப்பேரம் பேசப்பட்டதை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையிடம் ஏன் புகார் அளிக்காமல் பொது மேடையில் அரசியல் விளம்பரத்திற்காக அமைச்சர் பேசுகிறார் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo