அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பெருந்துறை அம்பாசமுத்திரம் திருச்சி கிழக்கு விராலிமலை, கரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் கட்சியை நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதோடு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் கஞ்சி சந்தித்த தோல்விக்கான காரணத்தையும் உட்க்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் டிசம்பர் மாதத்தில் கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இக்கூட்டத்தில் 84 மாவட்ட செயலாளர்கள் கட்சியின் முக்கிய முகங்களாக இருக்கும் தமிழ் மகள் உசேன் கே பி முனுசாமி திண்டுக்கல் சீனிவாசன் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags :



















