சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

by Admin / 02-11-2026 10:58:46pm
சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகி உள்ள முரசு புயல் காரணமாக சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை செய்ய வாய்ப்புள்ளதாகவும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலூர் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்தை சூறாவளிக்காற்று வீசப்படும் என்றும் அறிக்கை விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் நீர் அணிகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இடி மின்னல் அதிகம் இருக்கும் என்பதால் மின் சாதன பொருட்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனத்துடன் இருக்கவும் மரங்கள் அல்லது மின்கன்பங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர் அறிவிப்புகளை தொடர்ந்து கண்காணித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo