9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நாளில் வங்கிகளுக்கு விடுமுறை.

by Editor / 05-10-2021 05:54:16pm
9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நாளில் வங்கிகளுக்கு விடுமுறை.

9மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று, அந்த மாவட்ட வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக வங்கிகள் அறிவித்து உள்ளன.தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோதல் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக இநத் தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி முதற்கட்ட தேர்தல் வரும் புதன்கிழமை (அக்.6) அன்றும், 2வது கட்ட தேர்தல் வரும சனிக்கிழமை (அக். 9) தேதிகளிலும் நடைபெற உள்ளது. மேலும், , 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோதல் வரும் சனிக்கிழமையும் (அக்.9) நடைபெற உள்ளது.

இதையடுத்து, தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு அன்று பொதுவிடுமுறை அறிவித்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வங்கிகளும் விடுமுறை அறிவித்து உள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் , 6ந்தேதி (நாளை) வங்கிகளுக்கு விடுமுறை என்றும், 2வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 9ந்தேதி அன்றும், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் விடுமுறை விடப்படுவதாக அறிவித்து உள்ளது.

மேலும், அக்டோபர் 9ந்தேதி அன்று 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோதல் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via