மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள்  என்கவுண்டரில் சுட்டுக் கொலை

by Editor / 11-10-2021 04:20:42pm
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள்  என்கவுண்டரில் சுட்டுக் கொலை


 மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மணிப்பூர் மாநிலம், ஹிங்கோஜங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இன்று காலை திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இருத்தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ‘குக்கி’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது


. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதுவான் அபோன்மை என்னும் தீவிவாதி, செல்வாக்குமிக்க பழங்குடியினத் தலைவன் படுகொலை செய்யப்படிருக்கும் சம்பவத்தை யடுத்து மணிப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 22 முதல் நடந்து வருவது நினைவிருக்கலாம்.

இவரது மரணத்தையொட்டி கடமையைச் செய்யத் தவறியதாக 16 போலீசாரை அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. அசாம் நாகாலாந்து எல்லைப் பகுதியில் உள்ள மலை மாவட்டத்தில் ஒரு சில திட்டங்களைத் துவக்கி வைக்க முதல்வர் பீரென்சிங் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அபோன்மை கடத்திக் கொல்லப்பட்டது, மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via