19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை

by Editor / 15-10-2021 06:40:59pm
19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக  தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை


தமிழகத்தில் திருவள்ளூர், கடலூர், தஞ்சை, தூத்துக்குடி, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. அதன்படி, பொன்னேரி, திருநின்றவூர், திட்டக்குடி, வடலூர், அதிராம்பட்டினம், திருச்செந்தூர், கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, பள்ளப்பட்டி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோன்று, சிவகங்கை, திருச்சி, சேலம் மாவட்டங்களில் 5 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, மானாமதுரை, முசிறி, லால்குடி, இடங்கணசாலை, தாரமங்கலம் பேரூராட்சிகள், நகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.


உத்தேச நகராட்சிகளின் வார்டு எல்லைகளை வரையறை செய்து சாதாரண தேர்தல் நடத்தப்படும். மேலும், கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. புதிய மாநகராட்சிக்கான வார்டு எல்லை வரையறை செய்யப்பட்டு சாதாரண தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

 

Tags :

Share via