கல்வி தந்த கெளரவம்

by 1tamilnews Team / 30-10-2021 08:26:46pm
கல்வி தந்த கெளரவம்

கல்வி தந்த கெளரவம்

       நான்பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது என்று நேற்றைய தலைமுறையினரான அப்பாக்களின் தியாகத்தால், இன்றைய தலைமுறையினர் படித்து, பட்டம் பெற்று கார்பரேட், மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து தம் தகுதியை தம் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தியதோடு தம் ஊருக்கும் வருவாய்வழி பெருமை சேர்க்கும் பிள்ளைகளாகத் திகழ்கிறார்கள். அப்படிப்பட்ட பிள்ளைகளின் மனவோட்டம் குறித்த கவன ஈர்ப்பே இக்கட்டுரை.

 

கொடுத்து வைத்த தலைமுறை

       எல்லா விதத்திலும் இன்றைய தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள்.

       படிப்பு, பணம், வேலைவாயப்பு, உடை, உணவு, கார், பைக், கம்ப்யூட்டர், செல்போன் செளகரியங்கள் என ஏன் இன்று வீட்டுக்குள்ளேயே எல்லாவற்றையும் அப்பாக்களே தங்கள் பிள்ளைகளுக்குத் தங்களுடைய இன்னல்களையெல்லாம் மறந்து, தமக்குக் கிடைக்காத அத்துணையும் தம் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டுமென்று கடனபட்டேனும் வாரி வழங்குகிறார்கள். கொடுத்து வைத்தவன் என்று நண்பர்கள்அக்கம் பக்கத்தினர் பொறாமைப்படும் படியான இளைய சமூகத்தினர் எப்படி உள்ளனர். கிராமம் கூட இன்று அனைத்து வசதிகளையும் பெற்ற சின்னச் சின்ன நகரங்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன...ஒய்.பை வசதி இல்லாத ஒரு சில குக்கிராமங்கள் மட்டுமே உள்ளன..மற்றபடி அனைத்தும் அனைத்து விதமானவைகளையும் கொடுக்கக் கூடிய நிலைக்கு மாறியிருக்கிறது.

வீட்டுக்குள் உட்கார்ந்தே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும் மென்பொருள் கிராமத்து இளைஞர்கள் கார்பரேட்கள், மென்பொருள் நிறுவனங்கள் அனுபவங்களையெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்வது தண்டம் என்று உணர்ந்து, வீட்டையே அனுபவமாக மாற்றிக் கொண்டு அதற்கான பணத்தைத் தந்து விடுகிறேன் என்று சொல்லி வீட்டை அனுபவமாக மாற்றி விட்டது...எட்டு மணி நேர உழைப்பு....வீட்டுக்குள் மறைமுகமாக பத்து மணி பதினோறு மணி நேர உழைப்பாக மாறி...இல்லை உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் நிறுவனங்கள் பிடியில் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வங்கியில் வந்து விடும் பணத்தால் கிராமத்து இளைஞர்களின் மூலம் குடும்பம் செழிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லாச் செலவும் குறைந்து வீட்டுக்குள் வசதியும் ஆடம்பரமும் பெருத்துவிடச் செய்யும் நிலை வந்து விட்டது...எல்லாம் கொரானா கற்றுக் கொடுத்திருக்கும் பொருளாதார விதி.....

         ஆனால்,நாற்பது வயதுக்குக் கீழிருக்கும் இளைஞர் - பெண்களின் மன அழுத்தம் என்பது கூடிக் கொண்டேயிருக்கிறது என்பது தவிர்க்க முடியாத உண்மையாகிவிட்டது.

         அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்க்கும் பொழுது பல்வேறு அனுபவங்கள்-பழக்கவழக்கங்கள்,பொழுது போக்கு-மனம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் சூழல்.இவையெல்லாம் இருந்தன....ஆனால்,இன்று அது இல்லை...

         விதவிதமான உடை, காலணிகள், நறுமனம் சார்ந்த பொருள்களின் தேவை குறைந்துவிட்டது...தேவைப்படின், ஆன்லைன் உணவுகள் வாஙகிச் சாப்பிட்டுத் திருப்தி கொள்ளும் ஆறுதல்....ஹோட்டலில் உட்கார்ந்து அரட்டை அடித்தும் சாப்பிட்ட காலம் குறைந்துவிட்டது...இல்லை காணமலே போய்க் கொண்டிருக்கிறது..

         முகக் கவசமின்றி வெளியில் செல்வது ஒரு குற்றமாகவே பதிவு செய்யப்பட்டு விட்ட வாழ்க்கை.....

         வீடு சொர்க்கம் தான் எத்தனைக் காலம் அப்படியே உட்கார்ந்த வேலைக்காகவே... காசுக்காகவே வாழுகின்ற வாழ்க்கையாகப் போய்க் கொண்டிருக்கிறது..

         பெண்பார்க்க மாப்பிள்ளை பார்க்க போகும் நிலை தள்ளிப் போகிறது...வயது கூடி முதுமைத் தலைதூக்க ஆரம்பித்து விடுகிறது..கூடவே, உடல் சார்ந்த கவலை...மன இறுக்கம் வேறு.. யாரோடும் மனம் விட்டுப்பேசமுடியாத சூழலை வீடுஅனுபவமாக மாறிப் போனதால் செய்துவிட்டது..

         காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறினாலும் பெரிய நிறுவனங்கள் இனி அலுவலகம் தொடங்கி இளைஞர்களை வேலைக்கு வரச் சொல்வார்களா? என்பது சந்தேகமே

         உலகம் முழுதும் இன்று வீட்டுக்குள் உட்கார்ந்து கனவுகளைநம்பிக்கைகளைஆசைகளை மூட்டைக் கட்டி வைத்து பணத்தை மட்டும் அறுவடை செய்து கொண்டிருக்கும் எம் படித்த இளைஞ சமூகம்பின்னாளில் என்னவிதமான உளவியல் சூழலை எதிர்நோக்கப் போகிறதோ தெயவில்லை

         நாள்பட நாள்பட அவர்களின் நட்புவட்டம் வெறும் வாட்ஸ்ஆப்பில் மட்டுமே வாழும்நேரடி பேச்சு குறைந்துபோகும்அதனுடே அன்புபாசம், நட்பு, பகை, கோபம், விரக்தி, வேதனை என்பவை எல்லாம் குறைந்து; இல்லை காணாமல் போயிமன அழுத்தம் மட்டுமே பிரதான ஒன்றாக உருவாகிவிடும் என்பதுதான் நிதர்சணம்.. அதன் எதிரொலி மனம் அமைதியாக எதனையும் எதிர்நோக்கும் இல்லை, விட்டேத்தியாக பேசுகிறநிலை உருவாகும்இல்லை.. எல்லாவற்றையும் புறக்கணித்து அந்நியமயமாதல் சூழலை உருவாக்கும்

         வீட்டுக்குள் வேலைஆஹாமகிழ்ச்சி என்று துள்ளிக் குதித்தமனம் மெல்ல மெல்ல சுருங்கி போய்மகிழ்ச்சியைத் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

         உறவுகள் வீட்டிற்குள் வந்தால், பையன்பெண் ஆன்லைனில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. “Work from home”  என்று அம்மாக்களும் அப்பாக்களும் பெருமைப்பட்டுக் கொள்ளும்நிலை…. ஆனால், பிள்ளைகளோ.. காசு காய்க்கும் மரமாகிப்போனதால் மனம் மரத்துப்போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள்.

        மழிக்கப்படாத இளைஞனின் முகம்வெறும் டீசர்ட்டும், பெர்மாடசுடனும் தேவைப்படின் .டி.கார்டை தலையில் மாட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள்

        பெண்களோ அலங்காரமின்றிஏன் புன்னகை இன்றி மன இறுக்கம் முகத்தில் தெறிக்க..இயந்திரமாக சம்பாதித்துக் கொடுக்கும் மிஷினாகமீண்டும் வீட்டுக்குள் ஓர் அடிமைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்வந்த சுதந்திரம்படிப்பால் பெற்ற சுதந்திரம் பறிபோய்க் கொண்டிருப்பது நினைத்துக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்

        ஊர்விட்டு ஊர் வந்து பெரிய நகரங்களில் மென்பொருள் நிறுவன வேலை என்றிருந்த கெத்து விடைபெற்று விட்டதுமால்சினிமாபீட்ச், விரும்பிய ஹோட்டல்களில் சாப்பாடு, விதவிதமான ஆடைகள்விரும்பிய பொருள் ஹாப்பிங் வாங்க செல்லும் நிலை எல்லாம் மாறிவிட்டது

        கூடவே, வயதின் பருவக் கனவு கண்டு எல்லாம் மெல்ல மெல்ல தம்மை விட்டு போய்க் கொண்டிருக்கிறது என்கிற வேதனை பொழுதுகளின் நகர்வுகள்

        கடலுக்குள்ளிருக்கும் பனிப்பாறைகள் வெளியே தெரியாமலிருப்பது போல அவர்களின் கோசங்கள்என்று தீரும் இந்த வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலைகாத்திருக்கிறார்கள் இன்றைய இளைய  

Tags :

Share via