அதிசய கிணறு ... பூமிக்கு அடியில் நீரோடைகள் ..?

by Editor / 04-12-2021 01:10:09pm
அதிசய கிணறு  ... பூமிக்கு அடியில் நீரோடைகள் ..?

 
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால், அதன் பாசன வசதி பெறும் ஆயன்குளம் படுகைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீரானது ஆனைகுடி படுகைக்கும், அதன் அருகில் உள்ள 2 கிணறுகளுக்குள்ளும் பாய்ந்தோடுகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் பல மாதங்கள் தண்ணீர் சென்றாலும், இந்த கிணறுகள் நிரம்பியதில்லை.

இந்த கிணறுகளுக்கு தண்ணீர் செல்வதன் மூலம் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துவருகிறது. அத்துடன் உப்பு தண்ணீர் நல்ல தண்ணீராக மாறவும், இக்கிணற்று தண்ணீர் பயன்படுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த அதிசய கிணற்றை அப்பகுதியினர் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் சென்னைஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன் தலைமையிலான குழுவினர், 2-வது நாளாக அந்த அதிசய கிணறுகளை ஆய்வு செய்து வருகின்றனர். முதலில் கிணற்று தண்ணீர் மற்றும் அருகில் உள்ள கிணறுகளின் தண்ணீர் தன்மை குறித்து ஆய்வு செய்த அவர்கள், இரண்டு தண்ணீரும் ஒத்து போகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், அதிசய கிணறு அமைந்துள்ள பகுதியில் பூமிக்கு அடியில் நதிகள் ஓடியிருப்பாதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்,அந்த நதிகளின் ஈர்ப்புகளால்தான் நீர் மொத்தமாக உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும்  அவர்கள் கூறியுள்ளனர்.

அதிசய கிணறு  ... பூமிக்கு அடியில் நீரோடைகள் ..?
 

Tags :

Share via