உக்ரேன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் ஐநா பொதுச் செயலாளர்

by Staff / 19-04-2022 11:26:51am
உக்ரேன் போரால்  170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் ஐநா பொதுச் செயலாளர்

உக்ரேன் -ரஷ்ய  போரால்  170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரேஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் போரால் மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு மேல் மக்கள் வறுமை பசியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் நாட்டு எல்லைகளை கடந்து வளர்ந்துவரும் நாடுகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளதாகவும் பல தங்கள் வரலாறு காணாத  நிலையை எட்ட கூடும் என்றும் கூறியுள்ளார். மேலும் சர்வதேச சந்தையில் கோதுமை சோளம் விலை 30 சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். கச்சா எண்ணெய் விலை 60 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதுடன் எரிவாயு மற்றும் உரம் விலை இரு மடங்காக உயர்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo