10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

by Staff / 15-05-2022 03:58:28pm
 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

கொரோனா காலத்தில் போடப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் முதல்வர், கொரானா காலத்தில் உத்தரவை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகளை கைவிடப்படுவதாக தெரிவித்தார். இதற்கான அரசாணை கடந்த மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில், அரசின் அரசாணைப்படி கொரோனா காலத்தில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகளில், முறைகேடாக இ-பாஸ் பெறுதல், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட வழக்குகளை தவிர போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கொரோனா காலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள்ஆகியோர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இபாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவற்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via