தனியார் ஏ.டி.எம். எந்திரத்தில் கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

by Editor / 11-06-2022 08:37:20am
தனியார் ஏ.டி.எம். எந்திரத்தில் கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

தென்காசி அருகிலுள்ள  மேலக்கடையநல்லூர் பூங்கா அருகில் தனியார் நிறுவன ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. மற்ற வங்கி ஏ.டி.எம் மையத்தை விட இந்த எந்திரத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று மேலக்ககடையநல்லூர்  பஜனை மடதென்வடல் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி மாரியம்மாள் என்பவர்  ரூ. 9 ஆயிரம் எடுத்தார்.
அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் 15 நோட்டுகள் அதாவது 7500 ரூபாய் நோட்டுகள் கிழிந்து பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் சில  நோட்டுகள்  கரையான் அரித்த நோட்டுகளாகவே இருந்தது . இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்  உடனே தாம் கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் கூறியதற்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் எங்கள் வங்கியை சேர்ந்தது இல்லை என்பதால்   வங்கியிலும் அவர் புகார் செய்ய முடியாமல் தவித்தார். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஏடிஎம் ஊழியரிடம் புகார் தெரிவித்தும் அவர் இதுகுறித்து திருநெல்வேலி மண்டல அலுவலகத்தில் புகார் செய்ய   கூறிவிட்டு சென்றுவிட்டார். இது போல் மற்ற வாடிக்கையாளர்கள் சிலருக்கும் கிழிந்த நோட்டுகள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் எனது கணவர் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார் மகளின் பள்ளி சீருடைகள் வாங்க அனுப்பிய பணத்தை அவசர தேவைக்காக எடுத்த பொழுது இவ்வாறு உள்ளது.   அவசர தேவைக்காகதான் பொதுமக்கள் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்கின்றனர். ஆனால் அதில் இருந்து வினியோகம் செய்யப்படும் நோட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது. இதுபோன்ற தனியார் ஏ.டி.எம்.மையங்களை வங்கி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

Tags : Private ATM The public was shocked when the torn 500 rupee notes arrived in the machine

Share via