ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா இயக்கத் தலைவர் ஜவாஹிரி கொல்லப்பட்டார்

by Editor / 02-08-2022 04:26:52pm
ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா இயக்கத் தலைவர்  ஜவாஹிரி கொல்லப்பட்டார்

 அல்கொய்தாவின் தலைவர்களில் ஒருவரான அய்மன் அல் ஜவாஹிரி ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 3000 பேரை பலி கொண்ட 2001 ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் மூளையாக செயல்பட்ட 71 வயதுடைய தீவிரவாதிகள் ஜவாஹிரி  தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைக்கப்பட்டிருந்த நிலையில் காபூலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ஞாயிறு காலை சிஐஏவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய அதிபர் ஜோ பைடன் கொல்லப்பட்டதன் மூலம் இரட்டை கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தீவிரவாதிகள் எங்கு மறைந்திருந்தார் அவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்கும் என எச்சரித்தார்.

 

Tags :

Share via