மதுரை - கோயம்புத்தூர் இடையே விரைவு ரயிலின் வேகம் அதிகரிப்பு பயணிகள் மகிழ்ச்சி.

by Editor / 24-12-2022 09:21:40am
மதுரை - கோயம்புத்தூர் இடையே விரைவு ரயிலின் வேகம் அதிகரிப்பு பயணிகள் மகிழ்ச்சி.

மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722) மதுரையிலிருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேருகிறது. இந்த ரயிலின் வேகம் டிசம்பர் 25ஆம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டு கோயம்புத்தூருக்கு மதியம் 12.15 மணிக்கு சென்று சேருமாறு கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 30 நிமிடம் பயண நேரம் குறைகிறது.

மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721) கோயம்புத்தூரில் இருந்து மதியம் 02.05 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரை சென்றடையும். தற்போது இந்த ரயிலின் கோயம்புத்தூர் புறப்படும் நேரம் மதியம் 02.40 மணியாக மாற்றப்பட்டுள்ளது. புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதால் 35 நிமிட பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை வந்து சேரும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வேகம் அதிகரிக்கபட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via