பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

by Staff / 09-10-2023 11:01:07am
பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

உத்தராகாண்ட் மாநிலம் நைனிடாலில் நேற்று  இரவு நைனிடால் கலாடுங்கி சாலையில் 33 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via