நகைக்கடன் தள்ளுபடி எப்போது?

by Editor / 19-08-2021 01:09:23pm
நகைக்கடன் தள்ளுபடி எப்போது?

'கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதயடுத்து, திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்து வருகிறது.

இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருப்பவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியது. கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அதாவது 40 கிராம் அளவுக்கு உட்பட்ட நகையை ஈடாக வைத்து கடன் வழங்கப்பட்டு மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்களை இம்மாதம் 16ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தங்கள் வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நகைக் கடன் தள்ளுபடியில் உங்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. உங்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

அப்படி பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்தவர்களின் கடன் தள்ளுப'கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதயடுத்து, திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்து வருகிறது.

இந்நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்திருப்பவர்களின் விவரங்களை தமிழக அரசு கோரியது. கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் அதாவது 40 கிராம் அளவுக்கு உட்பட்ட நகையை ஈடாக வைத்து கடன் வழங்கப்பட்டு மார்ச் 31, 2021 வரை நிலுவையில் உள்ள விவரங்களை இம்மாதம் 16ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தங்கள் வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு "நகைக் கடன் தள்ளுபடியில் உங்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. உங்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்

அப்படி பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்தவர்களின் கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :

Share via