ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த தீவிர புயலுக்கு முரசு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்புயல் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 23 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்துள்ளது. நவம்பர் மூன்றாம் தேதி காலை ஆந்திரா கடற்கரையை மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீச கூடும் என்றும் இப்புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பெரிய பாதிப்பில்லை . இருப்பினும் வெளிப்புற மேகக் கூட்டங்கள் காரணமாக சென்னை, திருவள்ளூ,ர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
Tags :






.jpg)












