மம்தாவை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டி

by Editor / 10-09-2021 02:48:47pm
மம்தாவை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டி

மே.வங்கத்தில் பவானிப்பூரில் போட்டியிடும் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் போட்டியிடுவதற்காக பவானிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பவானிப்பூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்நிலையில், பவானிப்பூரில் மம்தாவை எதிர்த்து பா.ஜ., சார்பில் பிரியங்கா திப்ரிவல் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சாம்செர்கன்ஜில் மிலன் கோஷூம், ஜாங்கிபூரில் சுஜித் தாசும் பா.ஜ., சார்பில் போட்டியிட உள்ளனர்.இதனிடையே பவானிப்பூர் தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக மாநில துணைத்தலைவர் திலீப் கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு துணையாக எம்.பி.,க்கள் சவுமித்ரா கான் மற்றும் ஜோதிர்மயி சஙங் மகோதா ஆகியோரும், 8 வார்டுகளின் பொறுப்பு 8 எம்.எல்.ஏ.,க்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via