மேஷம் ராசி

by Admin / 02-05-2024 05:35:32pm
மேஷம் ராசி

சூரியன் ராசியில் இருப்பதால் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்பு அமையும். கலை சார்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். செவ்வாய் 11ல் இருப்பதால் சிந்தனைகளில் இருந்துவந்த தடுமாற்றம் குறையும். சித்திரை 09 முதல் செவ்வாய் 12ல் இருப்பதால் செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். புதன் 12ல் இருப்பதால் மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். சித்திரை 23 முதல் புதன் ராசியில் இருப்பதால் கணிதம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் 12ல் இருப்பதால் அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்பு அமையும். சித்திரை 12 முதல் சுக்கிரன் ராசியில் இருப்பதால் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனை அதிகரிக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குரு ராசியில் இருப்பதால் சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். சித்திரை 18 முதல் குரு 2ல் இருப்பதால் திடீர் தனவரவுகள் உண்டாகும். சனி 11ல் இருப்பதால் எதிர்பாராத சில உதவிகளால் நன்மை ஏற்படும். ராகு 12ல் இருப்பதால் அவப்பெயர்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கேது 06ல் இருப்பதால் தொழிலில் ஒருவிதமான மந்தநிலை ஏற்படும். 

 

Tags :

Share via