பதவி விலகினார் ஆஸ்திரிய அதிபர்.

by Editor / 10-10-2021 10:29:51am
பதவி விலகினார் ஆஸ்திரிய அதிபர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில், மைய வலது சாரி மக்கள் கட்சி மற்றும் தீவிர வலதுசாரி சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இதனிடையே பிரதமராக இருக்கும் செபஸ்டியன் குர்ஸ் பல்வேறு முறைகேடு, ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்றம் கூடியபோது, குர்ஸ்குக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அவர் பதவி விலக வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள குர்ஸ், கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து ஆஸ்திரியாவின் புதிய அதிபராக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via