சில வரிகளில் சில செய்திகளின் தொகுப்புக்கள்

by Editor / 20-11-2021 04:19:11pm
சில வரிகளில் சில செய்திகளின் தொகுப்புக்கள்


சாத்தனூர் அணையில் வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது இதனால் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் கடலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து இதனால் தாழங்குடா அருகே முகத்துவாரம் வெட்டி தண்ணீரை கடலில் கலக்கின்றன தற்போது வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர் தேக்கத்தில் இருந்து 27 அடி கொள்ளளவை எட்டியது அடுத்து நீர்த்தேக்க கரையின் பாதுகாப்பை கருதி 100 கன அடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது ஆபத்தை உணராமல் சுற்றியுள்ள கிராம கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மீன் பிடிப்பதில் ஆர்வம் காட்டிவருகின்ற்றனர்.


ஊத்தங்கரை அருகே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் TM தமிழ் செல்வம் நேரில் ஆய்வுமேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட எக்கூர், மகனூர்பட்டி ஊராட்சிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஊத்தங்கரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் TM.தமிழ் செல்வம் ஒன்றிய செயலாளர்கள் வேடி, தேவேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவணி புதூர் பாம்பாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அந்தபகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்,தற்பொழுது அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் தேடி வருகின்றனர்,


திருச்சி 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பில் கடையநல்லூர் மதினாநகரை சேர்ந்த  சாகுல்ஹமீது என்பவர் கைது.
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி பேராசிரியரிடமிருந்து தாலி கொடியை வழிப்பறி செய்து சென்ற கொள்ளயனை விரட்டி பிடித்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர்.

தமிழகத்தில் அம்மா மருந்த‌கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் - எதிர்கட்சி தலைவர் பழனிசாமி.

அம்மா மருந்தகங்களை மூடி, தனியார் மருந்தக‌ங்களை லாபம் கொழிக்க அனுமதிக்கும் மக்கள் நலனுக்கு எதிரான முடிவை அரசு கைவிட வேண்டும் - ஈபிஎஸ்.


எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்.Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK

கோவை மாவட்டத்தில்  நடந்தபாலியல் வன்கொடுமையால் இறந்த மாணவிக்கு நீதி  கிடைக்க சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  சேலம் மாவட்ட  பெண்கள்அழகு கலை நிபுணர்கள் சங்கம்சார்பில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மக்களைக் கவரும் வகையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் மேலும் அவர்கள் கூறுகையில் இந்த சம்பவம் போல் இனிமேல் எங்கேயும் எந்த மாநிலத்திலும் நடக்காத வரைஅதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் என வலியுறுத்தினர்.

 


 

சில வரிகளில் சில செய்திகளின் தொகுப்புக்கள்
 

Tags :

Share via