பண்டிகைக் கால  தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

by Editor / 28-10-2023 10:42:15pm
பண்டிகைக் கால  தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.


ஆம்னி பேருந்துக் கட்டணம் தொடர்பாக, அதன் ஊரிமையாளர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பதாவது, பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆம்னி பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு கட்டணத்தில் 25 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 5 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதன்படி, சென்னை – திருச்சி : குறைந்தபட்சம் ரூ.1,325 ஆகவும், அதிகபட்சம் ரூ.1841 ஆகவும் நிர்ணயம் சென்னை – நெல்லை : குறைந்தபட்சம் ரூ.1960 ஆகவும், அதிகபட்சம் ரூ.3268 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை – சேலம் : குறைந்தபட்சம் ரூ.1363 ஆகவும் செய்யப்பட்டுள்ளது, அதிகபட்சம் ரூ.1895 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை – மதுரை : குறைந்தபட்சம் ரூ.1688 ஆகவும் அதிகபட்சம் ரூ.2554 ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

சென்னை – கோவிலை பொறுத்தவரை குறைந்தபட்சம் ரூ.2211 ஆகவும் அதிகபட்சம் ரூ.3765 ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது . சென்னை – கோவை : குறைந்தபட்சம் ரூ.1725 ஆகவும் அதிகபட்சம் ரூ.2874 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags : பண்டிகைக் கால  தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

Share via