வெறும் 500, 700 ரூபாய் கொடுத்து ஸ்மார்ட் ஃபோன்

by Editor / 03-09-2021 09:11:00pm
வெறும் 500, 700 ரூபாய் கொடுத்து ஸ்மார்ட் ஃபோன்

ரிலையன்ஸ் நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போனை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது .

ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவான விலையில் 4 ஜி ஸ்மார்ட் போனை உருவாக்கி உள்ளது . ஜியோ போன் நெக்ஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் , 2 மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ளது .

இதனை ரிலையன்ஸ் நிறுவனம் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது . பேசிக் ஃபீச்சர்ஸ் வசதி கொண்ட ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

மற்றொரு ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் 7,000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. விலை குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட 10% கட்டணத்தை மட்டும் செலுத்தி ஸ்மார்ட் போனை பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது 500 அல்லது 700 ரூபாய் கொடுத்து ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொள்ளலாம். மீதித் தொகையை மாதந்தோறும் குறைந்த அளவில் கட்டினால் போதுமானது.

எஞ்சிய கட்டணத்தை நீண்ட கால தவணையில் செலுத்தும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பிரைமல் கேபிடல், ஐடிஎஃப்சி மற்றும் டிஎம்ஐ பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தவணை வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via