லிவிங் டுகெதர் - வழக்கு தொடர உரிமை இல்லை

by Editor / 05-11-2021 09:58:46pm
லிவிங் டுகெதர் - வழக்கு தொடர உரிமை இல்லை

கோவையை  சேர்ந்த கலைச்செல்வி,,கோவை நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தார் , “நான், ஜோசப் பேபி என்பவரை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்தேன். கடந்த 2016 முதல் ஜோசப் தனியாக வசித்து வருகிறார்.  எங்களை சேர்த்து வைக்க வேண்டும்” .

 இதற்கு ஜோசப் பேபி செய்த பதில் மனுவில், “எனக்கும் கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை. எனவே, அவரது வழக்கை நிராகரிக்க வேண்டும்”

 இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம்,, கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்தது..கலைச்செல்வி,சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்..

 நீதிபதி வைத்தியநாதன்,- விஜயகுமார்  அமர்வு,,' ‘இருவரும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியுள்ளனர்.. திருமணம் செய்யாமல், ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் எழும் பிரச்னைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்தவித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை.

பணப் பரிவர்த்தனை தொடர்பான பிரச்னையில் கலைச்செல்வி வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது  தெளிவாகிறது’ , என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via