4.81 கோடி சட்டவிரோத பண பரிமாற்றம் காரணமாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது

by Editor / 31-05-2022 07:37:10am
4.81 கோடி சட்டவிரோத பண பரிமாற்றம் காரணமாக  டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். கடந்த 2015 ம் ஆண்டு அரசு ஊழியராக இருந்தபோது அவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள் மூலமாக போலி நிறுவனங்களுக்கு சட்டவிரோத பணபரிமாற்றம்  செய்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து  விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில்,மேலும் 4.81 கோடி சட்டவிரோத பண பரிமாற்றம்  செய்யப்பட்டதாக அவர் மீது அவரது குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர்.

சத்யேந்தர் ஜெயின் இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தோல்வி பயத்திலேயே மத்திய அரசு அவரைக் கைது செய்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சத்யேந்தர் ஜெயின் இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்ல முடியாமல் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு முற்றிலும் போலியானது என்பதால் இன்னும் சில நாட்களில் அவர் விடுதலை செய்யப்படுவார். எட்டு ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாத வழக்கில், தேர்தலைக் கணக்கில் கொண்டு சத்யேந்தர் ஜெய்ன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

Tags : Delhi Health Minister arrested for illegal transfer of Rs 4.81 crore

Share via