திருவொற்றியூரில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான தியாகராஜ சாமி வடிவுடை அம்மன் திருக்கோவிலில் ஆதிபுரீஸ்வரர் வெள்ளிக்கவசம் திறக்கப்பட்டது

by Editor / 19-11-2021 03:58:22pm
திருவொற்றியூரில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான தியாகராஜ சாமி வடிவுடை அம்மன் திருக்கோவிலில் ஆதிபுரீஸ்வரர் வெள்ளிக்கவசம் திறக்கப்பட்டது


சென்னை திருவொற்றியூர் தியாகராஜர் வடிவுடையம்மன் கோயிலில் சுயம்பு புற்று வடிவாக காட்சி அளிக்கும் ஆதிபுரீஸ்வரர் மீதான வெள்ளிக்கவசம்  திறக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  ஆதிபுரீஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

      தொண்டை மண்டல சிவதலங்கள் 32 திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூரில் 5 ஆயிரம் ஆண்டு பழமையான தியாகராஜர் கோயிலில் புற்று வடிவில் ஆதிபுரீஸ்வர் சுயம்புவாக காட்சியளிக்கிறார் இந்நிலையில்

 ஆண்டு முழுவதும் புற்றின் மீது வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்ட நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.   

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமி  அன்று மட்டும் மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் மூன்று நாள்களுக்கு மட்டும் திறந்து புனகு  சாம்பிராணி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும் 

  கார்த்திகை பவுர்ணமியையொட்டி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கவசம் திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

 
  வெள்ளிக்கிழமை சனிக்கிழமை இரு தினங்களுக்கும் பொதுமக்கள் தரிசனத்திற்கு  அனுமதிக்கப்படுகின்றனர்

 பின்னர் சனிக்கிழமை இரவு 8 மணியளவில்  அர்த்தஜாம புஜைக்குப் பிறகு வெள்ளிக் கவசம் வேண்டும் ஆதிபுரீஸ்வரர் மீது  மூடப்படும்.    

கவசம் திறக்கப்பட்ட முதல்நாளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஆதிபுரீஸ்வரரை தரிசனம் செய்து அபிஷேகம் செய்த தைலத்தை வாங்கி சென்றனர்

 

Tags :

Share via